தமிழினப் படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான
இன்றும் (13) முல்லைத்தீவு முள்ளியவளை ஐயனார் குடியிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
ஐயனார் குடியிருப்பு இளைஞர் விளையாட்டு கழக ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது, அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வானது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது.