நாடளாவிய ரீதியில் பெரிய வெங்காயத்தின் விலை 190 ரூபாவாக இருந்த  நிலையில் இன்று விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 170 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக கொழும்பு மெனிங் சந்தையின் பிரதான வர்த்தக சங்கத்தின் பிரதான அமைப்பாளர் அணில் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

தம்புல்லையிலும் விலைக்குறைப்பு ஏட்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது தம்புல்ல பொருளாதார மத்திய நிலையத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 160 - 165 ரூபாயிற்கு விற்கப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 140 ரூபாவாக காணப்படுவதுடன் யாழ்ப்பான சின்ன வெங்காயத்தின் விலை 300 ரூபாவிற்கும் விற்கப்படுவதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி