இந்த ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், அரச அதிகாரத்தையும் அரச சொத்துக்களையும்
தவறாகப் பயன்படுத்திய 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பஃப்ரல் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி கூறுகிறார்.
இதில் 14 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தேர்தல் சட்டங்களை மீறிய 322 சம்பவங்கள் PAFFREL அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதன் கீழ் 18 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 17 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்காளர்களுக்கு உதவி வழங்குதல் மற்றும் இலஞ்சம் கொடுத்தல் தொடர்பான 38 சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், 70,000 வேட்பாளர்கள் போட்டியிடும் சூழ்நிலையில் அது ஒரு பாரதூரமான சூழ்நிலை அல்ல என்றும் ரோஹண ஹெட்டியாரச்சி கூறினார்.
பல வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும், ஒரு வேட்பாளர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளதாகவும், ஆனால் அது தேர்தலுடன் நேரடியாக தொடர்புடையதா என்பது இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அரச அதிகாரத்துடன் சில அறிக்கைகளை வெளியிடுவது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அது வாக்காளர்கள் மீது மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.