கொரோனா தொற்றுக்கு பயந்து சாரதி தற்கொலை!
கொரோனா தொற்றி இறந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக நாகொட வைத்தியசாலை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் இ.போ.ச ஓட்டுநரொருவர் நேற்று (8) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றி இறந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக நாகொட வைத்தியசாலை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் இ.போ.ச ஓட்டுநரொருவர் நேற்று (8) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றுக்கு உள்ளான 78 வயதுடைய நபரொருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தைத் தாய்வழிப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், தற்போது அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கிறார்.
நிபுணத்துவம் வாய்ந்த தொழில் நிபுணர்களுக்கு பதிலாக இராணுவத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ள விடயத்தை, யானைக் கால் நோய்க்கு மருந்து கட்டுவதைப்போல் சுகாதாரத் துறை புறந்தள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை "தவறான செய்தி புனைகதை" என ஜனாதிபதி நிராகரித்த நிலையில், இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சுற்றுச்சூழல் அழிவுக்கான பொறுப்பை அரச அதிகாரிகள் மீது சுமத்தியுள்ளார்.
பொரளை நகர எல்லைக்குள் நடத்தப்பட்ட திடீர் PCR பரிசோதனையில் 90 வீதமானோருக்கு கொரோனா தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.
கோவிட் 19 வைரஸ் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை மத நம்பிக்கையின்படி அடக்கம் செய்யும் உரிமையை பாதுகாப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் இருக்கும் நிலையில், இலங்கையில் அந்த உரிமை மறுக்கப்படுவது சம்பந்தமாக எதிர்க்கட்சியின் கவனம் திரும்பியுள்ளது.
யாழ். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரணைமடு குளத்து நீரை கொண்டு வருவதில் அரசியல் பிரச்சினை இருக்கின்றதென்றால், அவற்றுக்கு தீர்வுகண்டு, இரணைமடு குடிநீர் திட்டத்தை யாழ்.மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் நிமல் லான்சா உறுதியளித்தார்.
அமெரிக்க தேர்தலைப் பொறுத்தவரை, கடந்த பல தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அன்றைய தினமே முடிவுகள் வெளியாகிவிடும். இப்போது நடந்திருப்பது கடந்த பல வருடங்களில் நாம் காணாத ஒரு விஷயம்.
இலங்கையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலங்களை கடலுக்குள் பாதுகாப்பாக திருப்பி அனுப்ப நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ளாமை அந்த உயிர்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற கடல் உயிரியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த தடுப்புக்காவல் கைதியின் மரணம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சிறைக்கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
மன்னார் – மாந்தை மேற்கு கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள எழுவர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (5) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன் அக்கடிதத்தின் நகலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.