கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொவிட் 19 தொற்றிய நபராக அடையாளம் காணப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருரை இரண்டாவது PCR பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்

தற்போதைய நிலைமை காரணமாக புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களையும் ஒரே நேரத்தில் திரும்ப அழைத்து வருவது நடைமுறை சாத்தியமில்லை என்றும், அவர்கள் ஓர் ஒழுங்கு முறையில் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்றும் தொழில் அமைச்சர் நிமல்  சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

லடாக்கில், சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) மைக்ரோ வேவ் ஆயுதங்கள் எனப்படும் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளிவந்த இணைய தள ஊடகச் செய்திகளை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று முற்றிலுமாக மறுத்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய பிரதேச பாடசாலைகளை இம்மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக. இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பேராசிரியர ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளவாறு 6ம் தரத்திலிலிருந்து 13 தரம் வரை மாத்திரம் பாடசாலைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரின் மனைவியின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தும் போகம்பரை பழைய சிறைச்சாலையிலிருந்து கடந்த 17ம் திகதி இரவு சில கைதிகள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனையை வழங்கிய நீதிபதி அதற்காக தனக்கு பதவி உயர்வுவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட நீதிபதி துமிந்த சில்வாவிற்கு வழங்கிய தண்டனை உட்பட தனது சேவைக்காக பதவி உயர்வை கோரியுள்ளார் என ஆணைக்குழு முன்னிலையில் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் அப்துல் கலாமைப் போன்ற உருவ தோற்றம் இருப்பதால் பிரபலமடைந்தவர். இதனால், 'உடுமலை கலாம்' எனவும் அழைக்கப்பட்டவர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம் இன்னுயிரை ஈந்த போராளிகளையும் பொது மக்களையும் நினைவுகூருவதென்பது தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியன்று தமக்காக மரணித்தவர்களை நினைவு கூருவதைத் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிச குடியரசு ஆட்சியாகுமா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொற்றுநோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், உளவு பார்க்க இலங்கை பாதுகாப்பு படையினரால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ட்ரோன்களும் அதிக சக்தி வாய்ந்த ஜெட் விமானங்களும், தனிநபரின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக, ஆறு மாதங்களுக்கு முன்னர்,  உலகின் வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட ஒரு செயற்பாடு என தெரியவந்துள்ளது.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் 19 வேட்பாளர்களில் 12 பேர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்படுமென எண்ணி மீனை உட்கொள்வதற்கு பயப்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி