பொரளை நகர எல்லைக்குள் நடத்தப்பட்ட திடீர் PCR பரிசோதனையில் 90 வீதமானோருக்கு கொரோனா தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது இரண்டாவது கொரோனா பரம்பலில் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை கொழும்பு நகரில் வேகமாக அதிகரித்து வருகிறது. இரண்டாவது கொரோனா பரம்பலில் பெருமளவிலானோர் கொழும்பில் கண்டறியப்படும் நிலையில், வீட்டிற்குள்ளேயே மரணிக்கும் போக்கும் காணப்படுவதை கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

சனத்தொகை செறிவு அதிகமாக காணப்படும் கொழும்பில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக சமூகத்தில் பரந்து கிடக்கும் கொரோனா நோயாளர்கள் அறியாமையினாலும், சுகாதாரப் பிரிவுகளின் கண்ணில் சிக்காமலும் நோயை பரப்பிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

கொரோனா தொற்றுக்குள்ளான 400 பேர் இன்று (7) கண்டறியப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், கோவிட் 19 பரம்பலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மத்திய நிலையத்தின் கூற்றின் படி இவ்வாறு கண்டறியப்படும் நோய் தொற்றிய அனைவரும் பேலியகொட கோவிட் கொத்தணியோடு நெருக்கமானவர்களாகும்.

இவ்விதமாக நோயாளர் பரவலாகி வரும் நிலையில் கூடியளவு PCR பரிசோதனைகளை நடத்தி மக்கள் மத்தியிலுள்ள ஆபத்தை குறைந்த மட்டத்தில் நடாத்திச் செல்ல வேண்டியிருந்தாலும், அரசாங்கம் தேவையான ஒதுக்கீடுகளையும், பணியாளர்களையும் ஒதுக்கி அதற்குத் தயாராக வைத்திருக்கவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது. சுகாதாரத் துறைகளைப் போன்றே அரசியல் துறையினதும் கவனம் திரும்பியிருக்கவில்லை என்பதும் பிரச்சினையாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி