கோவிட் 19 வைரஸ் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை மத நம்பிக்கையின்படி அடக்கம் செய்யும் உரிமையை பாதுகாப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் இருக்கும் நிலையில், இலங்கையில் அந்த உரிமை மறுக்கப்படுவது சம்பந்தமாக எதிர்க்கட்சியின் கவனம் திரும்பியுள்ளது.

நவம்பர் 3ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இது சம்பந்தமாக பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். மேற்படி விடயம் சம்பந்தமாக குழுவொன்றை அமைத்து தீர்மானத்தை பெற்றுத் தருமாறு கோரப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இது வரை நீதி கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

‘இதுவரை 9 முஸ்லிம்கள் மரணித்துள்தோடு அவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் நீதி அமைச்சரான நீங்களோ அல்லது நானோ இறந்துவிட்டாலும் அந்த உரிமை மறுக்கப்பட்டுவிடும்’. எனவே, இந்த விடயத்தில் நீதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பா.உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி ஒருவர் இறந்த பின்னர் அவரை அடக்கம் செய்வது இறந்தவருக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாகும். இறந்தவர்களை தகனம் செய்வது இஸ்லாமியர்களின் உரிமையை பறிப்பதாகுமெனக் கருதப்படுகிறது. ஆகவே கொரோனா நோயினால் இறக்கும் இஸ்லாமியர்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கடந்த மார்ச் மாதம் கொரோனா அலை வீசத்தொடங்கிய சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய சமூகம் கோரிய போதிலும், அந்த கோரிக்கை தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணானதெனக் கூறி அரசாங்கம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

என்றாலும், முஸ்லிம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதனால் கொரோனா பரம்பலுக்கு வாய்ப்பில்லை என்பதால் தனிமைப்படுத்தல் முறைக்கேற்ப அவ்வாறு இறுதிக் கிரியைகளை செய்வது தவறாகாதென உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவினால் இறந்த 13 முஸ்லிம்களின் உடல்கள் இதுவரை தகனம் செய்யப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி