பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட மின் துறையின் திசையை எடுத்துக் கொண்டு, மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை (Floating Solar System) விரைவுபடுத்த வேண்டும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும கூறுகிறார்.

நாடாளுமன்ற வளாகத்தின் தினசரி மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் 1.5 மெகாவாட் திறன் கொண்டது.

மின்சார நுகர்வோருக்கு தடையின்றி, தரமான மற்றும் மலிவு விலையில் நிலையான மின்சார சேவைகளை வழங்குவதற்காக இலங்கை மின்சார சபை முழு நாட்டையும் உள்ளடக்கிய பல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைத் தொடங்கியுள்ளது, மின்சார துறைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்களிப்பை 70% ஆக உயர்த்துவதற்கான நோக்கங்களை 2030 ஆம் ஆண்டளவில் அடைவதற்கு இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கூறுகிறார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அலகபெரும மற்றும் சூரிய, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட மேம்பாட்டுத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க இந்த திட்டங்களுக்கு மேலதிகமாக, இந்த மிதக்கும் சூரிய மின் நிலையக் கருத்திட்டம் பலனளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டத்தில், முதல் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் இந்திய அரசாங்கத்தின் கடனின் உதவியுடன் தியாவண்ணாவில்ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி