தெனியாய கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பொதுச் சபைக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி (பிஏடி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2/3 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு பெற்ற கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு அணி 39 ஆசனங்களையும், வெற்றி பெற்ற அணி 55 ஆசனங்களையும் கைப்பற்றியது.

அவர்களில் பெரும்பாலானோர் (48) ஜே.வி.பி.யின் ஆதரவுடன் இயங்கும் கொட்டபொல பாதுகாப்பு அமைப்பினால் வெற்றிபெற்று சபைத் தலைவர் உட்பட அதிகாரத்தை இலகுவாக நிறுவிக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பணிப்பாளர்கள் குழு இங்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் செய்யும் என்பது குறித்து இறுதிக் கணக்கீடு செய்யப்படவில்லை.

சுமார் 50,000 உறுப்பினர்களைக் கொண்ட கொட்டபொல பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் இலங்கையின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடந்த தேர்தலில் 90% அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தெனியாய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க ஜனாதிபதியின் மருமகளின் மகனாவார். பசில் ராஜபக்சவின் வழிகாட்டுதலின் கீழ் அரசியலில் பிரவேசித்த நிபுன ரணவக்க, கடந்த பொதுத் தேர்தலில் டளஸ் அழகப்பெருமவை பதவி கவிழ்க்க ராஜபக்ச குடும்பத்தினரால் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அதிகார சபையின் தலைவருமான சிறிபால அமரசிங்க இந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தார்.பசிலின் ஆதரவாளர்கள் பொதுத் தேர்தலில் நிபுன ரணவக்கவைப் பாராட்டியதுடன், அவர்தான் நாட்டின் வருங்காலத் தலைவர் என்றும் கூறிஇருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி