கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் கல்விக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் குண்டர்கள் இடையூறு விளைவித்து (டிசம்பர் 6) திங்கட்கிழமை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த பி. உதயரூபனுக்கு எதிராக பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சிவானந்தா வித்தியாலய மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவித்து, காலை பாடசாலைக்கு வந்த மாணவர்களை பாடசாலைக்குள் நுழைய விடாமல்  25பேர் அடங்கிய பிள்ளையானின் குண்டர்கள் பாடசாலை வாயிலை மூடியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாயிலை மறிக்காமல் நடைபாதையில் போராட்டம் நடத்தலாம் என்று கூறிய ஆசிரியர்களையும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பாடசாலைக்குள் நுழைய முடியாதவாறு குண்டர்கள் தடுத்ததை கண்டதாகவும், அங்கு சென்ற உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் காரணமாக நேற்று பாடசாலையில் ஆசிரியர்கள் எவரும் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் ஆசிரியர்கள் கந்தன்குடி பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றதாகவும் சிரேஷ்ட ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பி உதயரூபன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கந்தன்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

“பொலிசார் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாடசாலை நுழைவாயில் கதவை மூடி மாணவர்களை பாடசாலைக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ள இந்த பலாத்காரமான கலவரச் செயலுக்கு சிவானந்தா வித்தியாலய அதிபரும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரும் மௌனம் காப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். "

p 2

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றினால் பாடசாலைகள் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை மாணவர்களின் கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்குக் கிடைக்கும் குறைந்த கால அவகாசத்தையும் குண்டர்கள் பறிப்பது பாரிய பிரச்சினை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை மீண்டும் ஆரம்பித்த பிறகு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி. உதயரூபன் தொடர்ந்தும் இவ்வாறான பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகியுள்ளதுடன், அந்த அச்சுறுத்தல்களின் தொடர்ச்சியே இந்த சம்பவமும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. பி உதயரூபன் தனது கருத்துச் சுதந்திர உரிமையில் இவ்வாறு தலையிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி