20 ஆம் நூற்றாண்டில் தென் ஆபிரிக்க நாடான நமீபியாவில் இனப்படுகொலை செய்ததாக ஜேர்மனி அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கைக்கு இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக  வந்துள்ள உலக வங்கியின் விசேட பிரதிநிதிகள் குழு மே மாதம் 17ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரை நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள் அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மக்களிற்கு தடுப்பூசி வழங்கி காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என இந்திய தூதுவருக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவசர கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து 4-வது முறையாக சிரிய அதிபராக பஷார் அல் அசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.  இந்தத் தேர்தலில் அதிபர் ஆசாத் மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல்லா சலூம் அப்துல்லா, மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் அகமது மரே ஆகிய இருவர் போட்டியிட்டனர்.

ஜப்பானிய சரக்கு கப்பலுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மோதியதில் காணாமல் போன 3 மாலுமிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கப் போகின்றோமோ இல்லையோ, உணவுக்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, வெகுவிரைவில் சாகப்போகின்றோம் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண் வைத்தியரை அச்சுறுத்தியமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்காக அவர் கைதாகியுள்ளார்.

கொடிய கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் தனியார் துறையின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உலகின் முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவர் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவிய எம்.வீ.எக்ஸ்பிரஸ் பர்ல் (MV X-PRESS PEARL) கப்பலின் தீ பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

லட்சத்தீவில் ஆளும் மத்திய அரசின் பிரதிநிதியான நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் திட்டங்கள் மற்றும் யோசனைகள் உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால் அவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி