1200 x 80 DMirror

 
 

வடகிழக்கு மக்களிற்கு தடுப்பூசி வழங்கி காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என இந்திய தூதுவருக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவசர கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வடகிழக்கு மக்களிற்கு தடுப்பூசி வழங்கி காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என இந்திய தூதுவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவசர கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வகையில் அதிகளவிலான கொவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கொவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக எமது வடகிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது. இவ் ஆபத்தான நி​லைமைபற்றி யாழ் இந்தியத் துணை தூதரகமும் நன்றாக அறிந்திருக்கும்.

இந்நிலையில் இலங்கை அரசால் தருவிக்கப்பட உள்ள சீன தடுப்பு ஊசிகளில் எவ்வளவு எம்மக்களுக்கு கிடைக்கும் என்று தெரியாது. இலங்கை அரசாங்கமும் இந்திய மத்திய அரசிடம் அவசரகோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் தடுப்பு ஊசிகள் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைபற்றியும் நாம் அவதானித்துள்ளோம். எனினும் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் எதிர்கொள்ளும் இவ் ஆபத்தான நிலைமையில் இந்திய அரசின் சாத்தியமானளவு உதவிகளை பற்றாக்குறையாக உள்ள தடுப்பு ஊசிகள் சம்பந்தமாக எதிர்பார்த்துள்ளார்கள்.

தங்களிடமிருந்து சாதகமான பதிலை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றோம் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி