இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார்.

இந்த மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவு எதிர்வரும் 17 மற்றம் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை வழக்கில் இருந்த விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதாவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று நிராகரித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாத காரணத்தினால் யாரும் மரணிக்கப் போவதில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவிடசலாந்தின் ஜெனீவா தலைமையகத்தில் இன்று (13) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 48வது கூட்டத் தொடரில் இலங்கை உட்பட சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கை முன்வைக்கப்படவிருக்கிறது.

தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.

ஒன்றரை வருட காலமாக கல்வி சீரழிந்துள்ள நிலையில் எதுவுமே செய்யாத அரசாங்கம், பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சி செய்வது பிள்ளைகளின் நன்மைக்காக அல்ல, ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு சம்பந்தமாக பெற்றோர் மத்தியில் வெறுப்பை வளர்ப்பதற்காகவே என ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் கூறுகின்றன.

இலங்கை மக்களை இரண்டுவேளை மட்டும் உணவு உண்ண அமைச்சர்கள் பரிந்துரைக்க இத்தாலியில் மகிந்த அன் கோ பங்கெடுத்த விருந்து சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இரத்தினபுரி – கெட்டந்தொல பகுதியில் கொள்கலன் லொறியொன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மீண்டும் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி