ஒன்றரை வருட காலமாக கல்வி சீரழிந்துள்ள நிலையில் எதுவுமே செய்யாத அரசாங்கம், பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சி செய்வது பிள்ளைகளின் நன்மைக்காக அல்ல, ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு சம்பந்தமாக பெற்றோர் மத்தியில் வெறுப்பை வளர்ப்பதற்காகவே என ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் கூறுகின்றன.

ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக நுண்ணியல் பாடங்களில் நடைமுறை பரீட்சைகளை மேற்கொள்ள முடியாமலுள்ளதாக பெற்றோர்களுக்கு உணர்த்தும் கைங்கரியத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஆனால், கோரோனா பரம்பல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். சுமார் 169,000 மாணவர்கள் தோற்றியுள்ள நுண்ணியல் பாடங்களின் பெறுபேறுகள் இல்லாமல் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதானது, மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாக இருக்மென்பதே ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் மற்றும் மேலும் சில தரப்பினரதும் பொதுக் கருத்தாக உள்ளது.

நுண்ணியல் பாடங்களுக்கான நடைமுறை பரீட்சைகள் நடத்தாமல் 2020 க.பொ.த. பரீட்சை முடிவுகளை வெளியிட அரசாங்கம் முன்வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கையில் இறங்க நேரிடுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்.

ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்பில் முறையான தீர்வு என்ற வகையில், அரசாங்கம் நியமித்த ‘பபோதினி’ கமிட்டியின் அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசாங்கத்தின் எந்தக் கருத்தும் வெளிப்படவில்லையெனக் கூறும் ஒன்றிணைந்த ஆசிரியர் சேவைகள் சங்கம், கோரிக்கைகள் சம்பந்தமாக நடைமுறை சாத்தியமான தீர்வின்றி, போராட்டத்தைக் கைவிட தயாரில்லையென வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் பிரதான செயலாளர் சஞ்சீவ பண்டார சமூக வலைத்தளங்கள் ஊடாக கூறுகையில், 4 அமைச்சர்களை கொண்டு 24 வருடங்களாக ஆசிரியர்களை ஏமாற்றிய அதே பாதையில் தரமற்ற வாக்குறுதிகளை வழங்குவதாகக் கூறியதோடு, ஒட்டுமொத்த ஆசிரியர் போராட்டத்தையும் சம்பளக் கோரிக்கைக்குள் சுருக்கிவிட்டு ஏனைய கோரிக்கைகளை புறந்தள்ளியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி