1200 x 80 DMirror

 
 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதுங்கி தலைமறைவாகவில்லை. சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 100 மெற்றிக் தொன் மருந்துப் பொருட்கள் போன்ற மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு வழங்கிய பொருட்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசிடம் கையளித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான காவல்துறை நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.

நீர் விநியோக வலையமைப்பு மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக இன்று ஏழு மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்று வருகிறது.

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இன்று  புதிய பிரதமர் ஒருவரின் தலைமையில், ஏற்கனவே பதவியில் இருந்த அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, இன்று காலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்தவுடன், அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் அவருக்கு இருந்த தேசியப் பட்டியல் ஆசனம் வெற்றிடமாகியுள்ளது.

அந்த வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி