1200 x 80 DMirror

 
 

 2022 ஏப்ரல் மாதம் 09, அன்று ஒரு நோக்கத்திற்காக கொழும்பு காலிமுகத்திடலுக்கு வந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் தொடங்கிய காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தில் பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் 'சமூக ஊடக ஆர்வலர்களின் ஒன்றியம்' என எங்களை நிலைநிறுத்திக் கொண்டோம்.

நாடு முகம் கொடுத்துள்ள டொலர் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விசேஷமான பொறுப்பொன்று உள்ளதாக நகர அபிவிருத்தி சச்பையின் புதிய தலைவராக இன்று (04) பொறுப்பேற்ற நிமேஷ் ஹேரத் அவர்கள் தெரிவித்தார்கள்.

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பருப்பு, சீனி, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு, ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டப்பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை அடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகள் மிகுந்த எச்சரிக்கையைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெத்தும் கேர்னரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவல உத்தரவிட்டுள்ளார்.

ஆங்காங்கே நடத்தப்படும் துப்பாக்கிச்சூடுகள், பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்படும் சடலங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட விமானப் படையின் ஆளில்லா விமானம் (Air Force Drone) தியவன்னா ஓயாவில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. 

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி