குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்று (18) தம்மைக் கைது செய்யவோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கவோ இடைக்காலத் தடையுத்தரவைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கச்சத்தீவில் வருடாந்தம் நடத்தப்படும் புனித அந்தோனியார் பெருவிழாவில் கலந்து கொள்ள இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் எவருக்கும் இம்முறை அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.


“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக மாற்றப்பட வேண்டும்" என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.


வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டல்களை இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.


இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், ‘தெமட்டகொட ருவானில்’ கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்களுக்கிடையிலான பனிப் போர் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளன.

இதில் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சாவிற்கு அரசாங்கத்தில் உள்ள மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தொலைபேசியில் மிரட்டும் ஒலிப்பதிவொன்று வெளியாகியுள்ளது.

கம்பஹாவில் உள்ள "சிதுசர" என்ற உயர்தர மாணவர்களுக்கான தனியார் கல்வி நிறுவனத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் சிசிடிவி கமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிந்தால், தேவைப்பட்டால் அவரைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி