நூருல் ஹுதா உமர் 

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி போன்ற நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்கங்களின் பின்னர் ஜப்பான் எவ்வாறு அபிவிருத்தியில் முன்னிலைக்கு வந்தது.

இவ்வாறே இலங்கையில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் பின்னர் அமைச்சுக்களும் நிறுவனங்களும் அபிவிருத்திகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை மற்றும் காரைதீவு உள்ளிட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக ஆரம்பகட்டமாக இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து குறித்த கட்டிட வேலைகளை ஆரம்பிப்பதற்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டிய பின் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்,

தான் பதவியேற்ற காலத்தில் கொரோனா என்றும் பொருளாதார நெருக்கடி என்றும் பல்வேறு தடைகள் வந்து அபிவிருத்தி விடயங்களில் கவனம் செலுத்த முடியாது போனதாகவும் தற்போது அவ்வாறான நிலை மாறி அபிவிருத்தி விடயங்களில் கவனம் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவைகளை முன்னெடுக்க முடியுமானவரை முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களும் விஷேட அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் அவர்களும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ. சம்சுதீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான ஏ.எம். அசாம் மெளலவி உள்ளிட்டவர்களுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், பிரதி அதிபர்களான திருமதி குறைஷியா றாபிக், றின்ஷா பர்வின், உதவி அதிபர் எம்.ஏ.சி.எல். நஜீம், பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

நூருல் ஹுதா உமர் 

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.ஜெயராஜன் இன்று(10) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந் நியமனத்தை வழங்கப்பட்டது. 

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். 

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி