கொழும்பு - கண்டி வீதியில்

கேகாலை மங்களகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது செல்ல நாய்க்குட்டியுடன் உயிரிழந்துள்ளார்.

ரம்புக்கன, குடாகம, பொலத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சனுரி இசுரிகா விக்ரமசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த அவரது இளைய சகோதரனும் மற்றுமொரு உறவினரும் விபத்தில் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த மாணவி தனது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை பெற்றுக் கொடுப்பதற்காக பேராதனை பிரதேசத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மாணவியும் வரும் செப்டம்பரில் பட்டம் பெறுவார் என எதிர்பார்த்திருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....