எச்.எம்.எம்.பர்ஸான்

நீரில் மூழ்கிய நிலையில் இளைஞன்

ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிதென்னை பகுதியில் இன்று (10) இடம்பெற்றது.

ரிதிதென்னை குளத்துக்குஅருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் குளக்கட்டில் சறுக்கி வீழ்ந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்க்பகட்ட விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

மரணமடைந்த இளைஞனின் உடலை பிரதேச மீனவர்கள் கண்டெடுத்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்த இளைஞன் ரிதிதென்னை புதிய கிராமம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சாலி முகம்மது றிஹாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....