இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்படும்

பாலஸ்தீன் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக, கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பு (CDMF) நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.

182 பள்ளிவாசல்களைக் கொண்ட CDMF கொழும்பு மக்களுக்கு சமூக, பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் முன்னிற்கிறது.
 
ரூ.27,268,592/- நிதி சேகரிப்பு!
 
CDMF உம் அதன் கீழ் இயங்கும் 12 கூட்டமைப்புகளும் இணைந்து பாலஸ்தீன் குழந்தைகளுக்காக ரூ.27,268,592/- நிதி திரட்டியுள்ளன.
 
திரட்டப்பட்ட நிதி விவரங்கள்:
 
(1) தெஹிவலை- கல்கிஸை ரூ.9,012,640/-
(2) கிருலப்பன- ரூ.1,000,000/- 
(3) புறக்கோட்டை (மத்திய) - ரூ.1,325,000/-  
(4) புதுக்கடை - ரூ.1,014,337/-
(5) மருதானை- ரூ.1,246,510/-
(6) தெமட்டகொடை - ரூ.660,800/-
(7) கொலன்னாவ பிரிவு - ரூ.2,527,475/-
(8) கொழும்பு வடக்கு - ரூ.2,044,000/-  
(9) கிராண்ட்பாஸ் - ரூ.1,519,440/-
(10) கொம்பனித் தெரு - ரூ.1,100,190/-
(11) கொள்ளுப்பிட்டி - ரூ.1,260,200/-
(12) மாளிகாவத்தை - ரூ.4,000,000/- 
(13) ஏனைய நன்கொடையாளர்கள் - ரூ.558,000/- 
 
நிதியை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு கோரிக்கை!
 
இந்த நிதி ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் வேலைப்பாட்டு நிறுவனம் (UNWRA) போன்ற தகுந்த நிறுவனங்கள் மூலம் காசா குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என CDMF கோரிக்கை விடுத்துள்ளது. 
 
மேலும், இந்த நன்கொடைகளைக் கண்காணிப்பதற்கும் பாலஸ்தீன் மக்களின் நலனுக்காக இதனைப் பயன்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு உதவி செய்யுமாறு பாலஸ்தீன் தூதரகத்தை CDMF தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிரேஷ்ட சட்டத்தரணி நூர்டீன் பலஸதீனுக்கான இலங்கை தூதுவரை கேட்டுக் கொண்டார்.
 
இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்படும் பாலஸ்தீன் மக்களின் துன்ப நிலை குறித்தும் குறிப்பாக அங்குள்ள குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும் இலங்கை முஸ்லிம்கள் கவலை கொண்டுள்ளனர்.
 
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதர, சகோதரிகளாக பார்க்கப்படுகிறார்கள். போர், வன்முறை என்பவற்றால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் மீது இயல்பாகவே இரக்கமும் கவலையும் ஏற்படும். குழந்தைகள் பாதிக்கப்படும் போது அந்த உணர்வு மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாகவே பாலஸ்தீன் குழந்தைகளின் நிலை குறித்து இலங்கை முஸ்லிம்கள் கவலைப்படுகிறார்கள்.
 
இஸ்ரேல் பாலஸ்தீன் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அனியானமானவை என்று இலங்கை முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இந்த அநீதியை எதிர்த்து போராடுவதும், பாலஸ்தீன் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பமாக இருக்கிறது.
 
மேற்கூறிய காரணங்களால், பாலஸ்தீன் மக்களுக்காக குறித்த நிதி சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி