தலங்கம தலஹேன பிரதேச

வீடொன்றில் வைத்து  தனது நண்பருடன் இணைந்து 31 வயதுடைய மனைவியை அவரது கணவன் கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதாகவும், குறித்த நபரும் அவரது நண்பரும் இணைந்து கூரிய ஆயுதத்தால் தாக்கி  பெண்ணை கொன்று விட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டுச் சென்றதாகவும், பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹிங்குராக்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான உயிரிழந்தவரின் கணவரும் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய மற்றைய சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி