9 மாகாணங்களில் பணியாற்றும்  5 பொலிஸ் பரிசோதகர்கள்

,13 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 153 பொலிஸார்  கடந்த ஆறு மாதங்களில் தாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 81 சார்ஜன்ட்களும் 54 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அடங்குவர்.

இவர்களில் 143 பேர் உத்தியோகபூர்வ பொலிஸ் கடமைகளைச் செய்யச் சென்றபோது தாக்கப்பட்டுள்ளனர். 

பதியத்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அவரது  மனைவி எனக் கூறப்படுபவர் அவரது வீட்டில் வைத்து தாக்கிய சம்பவம்  தவிர, மற்ற ஒன்பது சம்பவங்களும் அவர்களது வீடுகளுக்குச செல்லும்போது  வழியில் வைத்தும் மற்றையவை கடமையில் இல்லாதபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும்.

இந்த ஆறு மாதங்களில் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

28 சம்பவங்களில் 31 பேர் தாக்கப்பட்டுள்ளனர். 13 சார்ஜென்ட்கள், 14 கான்ஸ்டபிள்கள், மூன்று பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் இவர்களில்  அடங்குவர்.

அதற்கு அடுத்தபடியாக வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையான பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இரு மாகாணங்களிலும்  தலா 12 வழக்குகள் என 24 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய மாகாணத்தில் 10 தாக்குதல் சம்பவங்களும், கிழக்கு மாகாணத்தில் 8 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த மாகாணத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் தாக்கப்பட்டனர்.

இதேவேளை, கடமைகளை செய்யும்போது அதிகாரிகளை தாக்கும் நபர்களைக் கைது செய்து சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் மா அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பணிக்கு புறம்பான சம்பவங்கள் காரணமாக தாக்கப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிடியாணை கைதுகள், சட்ட அமுலாக்க போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பிற கடமைகளின்போதும் பலர் கடமையில் தாக்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி