ஐ .நா மனித பேரவையில் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குனவர்த்தன தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தினேஷ் மீது கடுமையான கோபத்துடன் நடந்துள்ளதாக தெரிய வருகின்றது. அவருக்கு கொடுத்த பொறுப்பை அவர் மீறிவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய கூட்டணிக்கு இன்று ரவி கருணாநாயக்க எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அன்னச்சின்னத்தை கொடுத்திருப்பதாக அறியக்கிடைகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் இதுவரையில் நடைமுறையில் இருக்குமாயின் 1 லீட்டர் 20 ரூபாவால் குறைந்திருக்கும் அத்துடன் பேருந்துகட்டணம்,முச்சக்கர வண்டி கட்டணம் என்பனவும் குறைந்திருக்கும் இதனால் மக்களுக்கு இலகுவாக இருந்திருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி தமிழ் மக்களில் பெரும்பாண்மையானோர் எவ்வித நீதியும் இல்லாமல் தங்களது போராட்டம் தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியுடன் ஐ.தே.க ஒன்றுபட்டு செயற்படுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன சந்தானய கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் குழுவில் விமல் வீரவங்ச வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை.

கேரளாவில் கலப்புத் திருமணம் மற்றும் மதம் மாறி திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பாக வசிப்பதற்காக காப்பகங்களை ஏற்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது பேசுகையில் களுகு அடி அடிப்பேன் என்று கூறி இருந்தார். இந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கேட்டிருந்தது. இவர்கள் இப்படி இருக்கையில் பொதுத்தேர்தலில் ஒன்றாக போட்டி இடுவது எப்படி என்று கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

இம்முறை பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று ஹிருனையா ஹேரத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கண்டி மாவட்ட ஐ.தே.க ஆதரவாளர்கள் அணைவரும் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் இணைகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தலைமையின் கீழ் நவ லங்கா நிதகஸ் பக்ஷய (NLNP) நாளை 6 ஆரம்பிக்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இந்நிகழ்வு நாளை 10 மணிக்கு கோட்டே சோலீஸ் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக அறியக்கிடைகின்றது.  

எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதே ஐ.தே க இலக்கு என ஐ.தே.க கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் அதுதான் கட்சியின் உடைவை தடுக்கும் என்கிறார் சஜித் அணியினருக்கும் இது சம்பந்தமான தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிறைய வேளைப்பழுக்களுக்கு மத்தியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்று எம் முன் வந்துள்ளது அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெறும் என்று கட்சியின் நிர்மான கர்த்தாவும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் இளைஞர்,யுவதிகள் மற்றும் அறிவுத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று முன்பு கூறப்பட்டது.ஆனால் இப்போது கதை பழைய பக்கம் திரும்பியுள்ளது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 95% மானோருக்கு பாராளுமன்றத்தேர்தளில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பலர் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி