நான் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் மிகவும் பொறுப்புடன் எனது மக்களுக்கு நான் கூற நினைப்பது  இந்த வழக்கில் அங்கு நடந்த நிகழ்வுகளின் உண்மை தன்மை தொடர்பாக நீதிமன்றமேதீர்மானம் எடுக்க வேண்டும்.

பொலிசார் வெளியிடும் தகவல்களும் ஏனைய ஊடகங்களும் பத்திரிகையில் வெளிவரும் தகவல்களும் உண்மையானவையா  என்பதை நீதிமன்றம் மட்டும் தீர்மானிக்கும். எனக்கு கிடைத்த சில நம்பத் தகுந்த தகவல்களின் அடிப்படையிலேயே  பொய்யான தகவல்களையும் கூறும்படி  பொய் சாட்சிகளை உருவாக்கும் முயற்சியில் குறிப்பிட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது .

ஆகவே இந்தத் தகவல்களை பெரிதுபடுத்தி சமூக ஊடகங்களிலும் அல்லது ஏனைய ஊடகங்களில் எழுதுவதை தவிர்த்து இன முரண்பாட்டுக்கு இடம் கொடுக்காமல் இந்த பிரச்சினையை விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும்.

இந்த நாடு சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நாட்டின் இந்த 73 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிமைத்தனத்தின் வடிவமாக வீட்டுக் பணியாட்கள், வீட்டுப் பணிப்பெண்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

இதன்மூலம் தனவந்தர்கள் சாதி, மத பேதமற்று மிகக்குறைந்த கூலிக்கு அடிமைகளைத் தேடிக் கொண்டார்கள். இதற்கு அரசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முற்றுமுழுதான பொறுப்பை ஏற்க வேண்டும். வீட்டு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமோ சமூகப்பாதுகாப்பு மற்றும் வேலைநாட்களோ வேலை நேரமோ

வேலை ஒப்பந்தமோ விடுமுறை தொடர் பாகவோ சட்ட ஏற்பாடு இல்லை. சட்டவாக்கத்தில் நியதிச் சட்டங்களில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக ஒரு பாரிய வெற்றிடம் காணப்படுகின்றது. இவர்களுக்கு எந்தவித பாதுகாப்பபோ உரிமையோகிடையாது. இந்த அவலநிலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இதனால்  இதை ஒரு சமூகப் பிரச்சினையாக நாங்கள் பார்க்கிறோம்.  இதற்கு தீர்வு காணப்படவேண்டும். எதிர்காலத்திலும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும், என்ற அடிப்படையிலேயே ஒரு சமூகம் இதற்காக  போராடுகின்றது என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குறித்த ஒரு நபரை தண்டிப்பது குறித்த நபர் மீதான ஒரு அரசியல்  காழ்ப்புணர்ச்சி எம் சமூகத்துக்கு இல்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ்மக்களைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீது அருவருக்கத்தக்க இனவாத தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு குறித்த சிறுமியை பற்றியோ அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றியோ சேறு பூசுவதையும் குற்றம்சாட்டுவதையும் தமிழ் மக்கள் மீதான இனவாதவெறுப்பூட்டும் தாக்குதல்களை பொறுப்புள்ள இளைஞர்கள் நிறுத்திக்கொண்டால் ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்த முடியும்.

இந்த இனவாதிகளுக்கு துணைபோகும் விதத்திலே  இன முரண்பாட்டை உருவாக்கும் விதத்திலே  சில மதவெறி பிடித்த நபர்கள், அமைப்பினர்  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றார்கள்.

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இவ்வாறு முகநூலிலும் ஏனைய ஊடகங்களிலும் செயற்படுபவர்களுக்கு  நாம் எந்தவகையிலும்  உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்கக் கூடாது என்று அன்புடன்கேட்டுக்கொள்கின்றேன்.

இறுதியாக முகநூலை முட்டாள்களின் கூடாரமாக மாற்றி விடாதீர்கள் என்ற வேண்டுகோளை அருவருக்கத்தக்க விதத்திலே மனித குலத்திற்கு எதிராக இனவாதம் பேசும் நபர்களுக்கு முன்வைக்கிறேன்.

நன்றி.

சட்டத்தரணி த.ஜெயரட்னராஜா.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி