ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவ ஜனாதிபதியாக இருந்தபோது அவரது தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவைக் கொலைசெய்ததற்காக துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கவால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி கஸ்சாலி ஹுசைன் தாக்கல் செய்த இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

மனுவில், மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு அரசியலமைப்பின் பிரிவு 34 மற்றும் 34 (1) ன் கீழ் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.மன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது, ஆனால் சட்டத்தரணி,பொது மற்றும் நீதி அமைச்சரின் ஆலோசனையின்றி இந்த அதிகாரத்தை "தன்னிச்சையாக" பயன்படுத்த முடியாது என்று ஜூன் மாதம் ஒரு கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவதில் இந்த நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று மனுதாரர் கஸ்சாலி ஹுசைன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர், சிறைக் கைதிக்கு எந்த அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டது என்பதை விளக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

மனுதாரர்கள் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது சட்டத்திற்கு முரனானது என்றும் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் துமிந்த சில்வா உற்பட 13 பேர் மீது சட்டமா அதிபர் 2016 செப்டம்பர் 08 அன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணைக்குப் பிறகு, ஐந்து பிரதிவாதிகளும் கொலை குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனையை எதிர்த்து துமிந்த சில்வா உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மேன்முறையீடுகள் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய குழுவினால் 2018 அக்டோபர் 11 அன்று நிராகரிக்கப்பட்டது மற்றும் கொழும்பு உயர் நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஒருமனதாக உறுதி செய்தது.

தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்றிய துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியாகி ஒரு வருடம் கழிந்ததும் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி