நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் திருமணமான 15 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர்.பிரபல நடிகர் அமீர்கான் தனது லால் சிங் சதா படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.  இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டிரான்ஸ்ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானங்களில் ஒன்று நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடலில் இறங்கியது.இந்த நிகழ்வின்போது விமானத்தில் இருவர் இருந்தனர். இவர்கள் இருவருமே அதன் விமானிகள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று, இன்று பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 7 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் தேவை கருதி இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதி கோட்டாபயவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாம் சர்வதேசத்துக்குச் சென்றால் நாட்டு மக்களுக்குத் தான் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு அது புரியவில்லையெனத் தெரிவித்த முன்னாள் அமைச்சரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர இந்த விடுதலை தொடர்பில் விளக்கம் கோரி சட்டத்தரணிகள் சங்கத்தாலும் தனது புதல்வி ஹிருணிகாவாலும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரை பதிலில்லை என்றார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் உடன்படும் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக்கொள்ளப்படுதெனத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி, எவரையும் தவிர்த்து விட்டுப் பயணிக்கும் எந்தவிதத் தேவையும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

Xpress Pearl கப்பல் விபத்திற்குள்ளாதனால் வெளிநாட்டு பணியாளர் இலங்கைக்கு அனுப்பிய ரூ.48 மில்லியம் மதிப்புள்ள பொருட்களும் அழிந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்டுள்ள பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜசீமின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யுமாறு கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சமுகமளித்திருக்கவில்லை. இதனால் வழக்கு பின்போடப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. புரட்சி செய்தபோதும், புரட்சியில் வென்று ஆட்சிக்கு வந்த பிறகும் பல மாறுபட்ட நடவடிக்கைகளை இந்தக் கட்சி முயற்சி செய்து பார்த்திருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் சிட்டுக்குருவிகளை அழிக்கும் திட்டம்.

இன்ஸ்டாகிராம் வழியாக உலகிலேயே அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்களில் முதல் இடம் ரொனால்டோ , 27 வது இடத்தில் பிரியங்கா.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில்  ராஜபக்ச, மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு தற்போது தயாராகிவருகின்றார்.இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தேசியப்பட்டியல்மூலம் நாடாளுமன்றம் தெரிவான முஸ்லிம் எம்.பி ஒருவரை பதவி துறக்குமாறு பஸில் கட்டளையிட்டுள்ளார்.

பின்வாசலால் கொண்டுவரப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தோல்வியடைந்துள்ளதாகவும், போதுமான கருத்தாடலின்றி கொண்டுவரப்படும் ‘கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலும்” போன்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் காரணிகளுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்னேரிய தேசியப் பூங்காவில் யானைக் குட்டியொன்றை கடத்தியமை தொடர்பில் விசாரனை செய்வதற்காகச் சென்ற வன பாதுகாப்பு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட இராணுவ மேஜர் ஜெனரல் இன்று (1) காலை ஹபரண பொலிஸில் சரணடைந்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி