மருத்து ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஜயருவன் பண்டார இன்று காலை குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அன்டிஜன் பரிசோதனைக் கருவிகள் இறக்குமதியில் மற்றும் பரிசோதனைகள் சம்பந்தமாக பாரதூரமான பிரச்சினை இருப்பதாகவும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, அரச மருந்துகள் கூட்டுத்தாபனம், ஆகிய நிறுவனங்களில் நடக்கும் ஊழல், மோசடிகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை சம்பந்தமாகவும் அவர் யூடியுப் அலைவரிசையில் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காகவே CID க்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில் மருந்தவருக்கு தெரிந்த தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் இன்று காலை 8.30க்கு குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், மருத்துவர் பண்டார ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தெரிய வருகிறது. விசேட மருத்துவ நிபுணர் ஜயருவன் பண்டார் இதற்கு முன்பு சுகாதார அமைச்சின் ஊடக செய்தியாளராக இருந்ததோடு, அந்தப் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இவர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தார். என்றாலும் இவரது விண்ணப்பத்திற் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அது நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்த இவர் நீதிமன்ற உதவியை நாடினார். இவரது விண்ணப்பத்தை ஏற்று சுயாதீனக் குழுவொன்றின் மேற்பார்வையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதவிகளுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை பதவிகளுக்கான வாக்கெடுப்பு நடைபெறவில்லை

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி