மக்கள் அரசியல்வாதிகளை ஏற்றுக்கொண்ட காலம் முடிந்து விட்டது எனவும் அரசியல்வாதிகள் மக்களை ஏற்றுக்கொள்ளும் காலம் வந்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலகத்தின் புதிய கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த வைபவம் முடிந்தபின்னர், எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விதுர விக்ரமநாயக்க, உலகில் எரிபொருள் விலை குறையும் போது எமது நாட்டில் விலை குறைவதில்லை. காரணம் கடவுளே.. இது இலங்கை.

எப்போதும் இது போலவே நடக்கும். பொருளாதார முகாமைத்துவம் இல்லாதது பிரதான பிரச்சினை.பொருளாதார நோக்கு, இலக்கு இருக்கலாம். ஆனால் இலக்கை நோக்கி செல்லும் தெளிவான பாதை இருக்க வேண்டும்.

இலக்கு நோக்கிய பாதைய இல்லாத காரணத்தினாலேயே மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள். எரிபொருள் விலை அதிகரித்தால், கட்டாயம் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்.

அந்த சுமையை நாட்டு மக்களே சுமக்க வேண்டும். பேருந்து கட்டணம் அதிகரிக்கும். முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கும். மக்களை கஷ்டங்களுக்கு உட்படுத்தக் கூடாது. இதுதான் எனது தனிப்பட்ட நிலைப்பாடு.

சரியானவற்றை சரியானது என்றும் தவறை தவறு என்றும் நான் பாடசாலை செல்லும் காலத்தில் இருந்தே கூறி வருகின்றேன். எனது தந்தையும் இதனையே கூறினார் எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி