திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரினால் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பொலிஸ உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

விடுமுறை தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வந்த தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், இன்று காலை மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த OIC உற்பட இருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரில் ஒருவர் இன்று  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர், பிபில மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

OIC உடன் மேலும் ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் பொலிஸ் சார்ஜன்ட் இரண்டு T56 துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்களுடன் எத்திமலே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி