அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஊழியர்களை பணிநீக்கியமைக்கு எதிராக குரல்பொடுத்த ஒரு முன்னணி தொழிற்சங்கத் தலைவரை பணி நீக்கியுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு உரங்கள் மற்றும் பிற விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்து வரும் பவர் நிறுவனம், அரசாங்கம் எந்த சலுகைகளையும் வழங்காததை எதிர்த்த நிறுவனத்தின் ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பும் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட  இலங்கையின் முக்கிய தொழிற்சங்கத் தலைவரான பாலா தம்போ தனது பணிக்காலம் முழுவதும் தலைமை தாங்கிய இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் (CMU) தற்போதைய தலைவரை பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர் வாழ்வதற்கு முக்கியமானாகக் கருதப்படும் இலட்ச ரூபாய் பெறுமதியான Tocilizumab தடுப்பூசியை சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனமான பவர் இலங்கைக்கு இறக்குமதி செய்கிறது.

“அனைத்து ஊழியர்களையும் வரவழைத்து, உரப் பிரச்சினையில் அரசாங்கம் எங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என நிறுவனம் கூறியது. அதனால் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமெனவும், நட்டஈட்டைத் தருவதாகவும் அதனைப் பெற்றுக்கொண்டு தாமாக பணியில் இருந்து விலகுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து தொழிற்சங்கத்துடன் பேச வேண்டுமெனக் கூறினேன். எனினும் என்னை பணி நீக்கி கடிதம் வழங்கினார்கள்.” என இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும், அதன் பவர் நிறுவன கிளையின் தலைவரும், குறித்த நிறுவனத்தில் 28 வருடங்களாக பணியாற்றி வருபவருமான மங்கள அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கத் தலைவர் அபேவிக்ரம, தன்னிச்சையாக பணிநீக்கம் செய்யப்பட்டமை குறித்து தொழிலாளர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜனவரி 5ஆம் திகதி விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

“அண்மையில் 60 ஆண்டுகளாக எங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து ஒரு தலைப்பட்சமாக விலகிக் கொண்ட பவர் நிர்வாகம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு அழைப்பு விடுத்தபோது அவ்வாறு செய்யாத நிலையில், கடந்த காலத்தில் தொழிற்சங்க எதிர்ப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது ஒரு முதல்  படியாகும்.” என இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் துணை செயலாளர் செல்லையா பழனிநாதன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக தொழிலாளர்களின்  சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை என பவர் குறிப்பிட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி டிசம்பர் 22ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள பவர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு முன்பாக தொழிலாளர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் அனைத்துக் கிளைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், கொள்ளுப்பிட்டியில் உள்ள தொழிற்சங்கத் தலைமையகத்திலிருந்து அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பவர் கம்பனியை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

"பவர்  நிறுவனத்தின் நியாயமற்ற தொழிலாளர் கொள்கைக்கு எதிராக தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம்.

தொழில் அமைச்சர், தொழில் ஆணையாளர் ஆகியோர்  பணிநீக்கம் நியாயமற்றது என்பதை ஒப்புக்கொண்டனர்.” என செல்லையா பழனிநாதன்  குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 5 தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தன்னிச்சையான பணிநீக்கம் மற்றும் நியாயமற்ற தொழிலாளர் கொள்கைக்கு எதிராக பவர் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்படும் என அவர் வலியுறுத்தினார்.

kl

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி