யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு, திருத்த வேலைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும்,  காங்கேசன்துறை துறைமுகத்திலேயே இன்னும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி தெரிவித்தார்.

முகமது அலி சத்பரா மலையேறுபவர்களின் சர்வதேச சமூகத்தில் ஒரு திறமையான வீரராகவும், தனது சொந்த நாடான பாகிஸ்தானில் ஒரு ஹீரோவாகவும் நினைவுகூறப்படுகிறார்.

நெற் செய்கையின் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை உலரவிடுவதற்காக பிரதான வீதிகள் உள்ளக வீதிகளை விவசாயிகள் பயன்படுத்துவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் கலந்துரையாடி முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமையை வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் அதிர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது பெரிதாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை.

ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகின்றது.ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான UNESCO 2011 நவம்பர் 3 ஆம் திகதி உலக வானொலி தினத்தை அறிவித்தது.

சர்வதேச அரங்கில் ஒரு விடயத்தையும் உள்நாட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் மற்றொரு விடயத்தையும் கூறுவதானது நாட்டுக்குதான் பாதகமானதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக மாறியவர் தான் நடிகை ஷாலினி அஜித்குமார். அதேபோல், ஷாலினி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ‘காதலுக்கு மரியாதை’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவ்ஹீத் சித்தாந்தத்துடன் ஆயுதம் ஏந்திய இஸ்லாமிய தீவிரவாதிகள் குழுவால் ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் பொதுபலசேனா அமைப்பு மற்றும் அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார ஆகியோருக்கு எதிராக ஊடக அறிக்கைகள் உள்ளன. கலகொடெ அத்தே ஞானசர தேரர் இந்த விவகாரம் குறித்து உடனடியாக அறிக்கையை வெளியிடுமாறு பொதுபலசேனா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தறை பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் கேட்கும் திறனை இழந்த மாணவனுக்கு நஷ்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா சொத்துகள் அரசுடைமை, எடப்பாடி பழனிசாமியின் சீற்றம், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகள் நீக்கம் என அ.தி.மு.கவை மையப்படுத்தியே அரசியல் களம் அணல் பரப்பிக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் திருப்பதியில் சாமி தரிசனம், மௌனப் புன்னகை என மர்மமாகவே வலம் வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக என்ன செய்யப் போகிறார் ஓ.பன்னீர்செல்வம்?

பெப்ரவரி 23 க்கு முன்னர் கொவிட் தொற்றுநோயால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாவிட்டால், இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி செயலகத்தின் முன் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் 'வெற்றிலை' சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நேற்று (11 வியாழக்கிழமை) மாலை சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்திலேயே எதிர்காலம் தங்கியுள்ளது என்பதற்கு தற்போது நீடிக்கும் தொற்றுநோய் ஒரு சான்றாகும். அறிவியல், தொழிநுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும் உரிமையாளராகவும் தலைவர்களாகவும் பெண்களும் பெண்பிள்ளைகளும் இருக்கும்போதே இதனை அடைய முடியும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி