மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் அதிபர் ராக் மார்க் கிறிஸ்டியன் கபோரை கிளர்ச்சிப் படைகள் அகற்றி ஆட்சியை கைப்பற்றினர்.

ஜனாதிபதி ரோச் கபோரை பதவியில் இருந்து அகற்றி அதிகாரத்தை கைப்பற்றியதாக புகின் பாசோ இராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவ அதிகாரி ஒருவர் அந்நாட்டின் தேசிய இலத்திரனியல் அலைவரிசையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை பலவீனமடைந்து வருவதனால் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் அதிபர் தவறிவிட்டதாக அந்நாட்டு ராணுவ தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜனாதிபதி எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை, கைது செய்யப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ALJAZEERA

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி