1200 x 80 DMirror

 
 

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் தெரிவித்த எதேச்சாதிகாரக் கூற்றைக் கண்டித்துள்ள, தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைமை, மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென நீதி அமைச்சரை வலியுறுத்தியுள்ளது

.

ஜனவரி 27 அன்று, நீதி அமைச்சர் அலி சப்ரி, இலத்திரனியல் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில், நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான தீர்வாக தொழிலாளர் அடிப்படை உரிமைகளை ஒழிப்பது குறித்து முன்மொழிந்தார்.

துறைமுகம், எண்ணெய்க் கூட்டுத்தாபனம், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் வைத்தியத் துறைகளில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை சட்டப்பூர்வமாக இரத்து செய்வதுதான் அவரது வெட்கமற்ற முன்மொழிவாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக இதனை இரத்து செய்வது மிகவும் பொருத்தமானது எனவும், காவல்துறைக்கும் இராணுவத்திற்கும் இந்த உரிமை இல்லை என்பதே அவரது வாதமாகவும் அமைந்தது.

இல்லையெனில், வேலைநிறுத்தம் ஏற்பட்டால், அந்தப் பகுதிகளில் பணியாற்றுவதற்கு திறன் கொண்ட பயிற்சி பெற்ற மற்றும் திறமையான பணியாளர்களை விரைவாகப் பணிக்கு அமர்த்துவது அவரது மற்றுமொரு முன்மொழிவாகவும் அமைந்தது.

மக்களைப் புறக்கணிப்பது நியாயமற்றது எனவும், அவர்களுக்குப் பின்னால் நாசகார சதிகள் இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

துறைமுகங்கள், எரிபொருள் மற்றும் மின்சார சபையில் அண்மைக்காலமாக நிலவும் அமைதியின்மையைக் கருத்திற்கொண்டு அமைச்சர் சதித்திட்டங்களை குறிப்பிட்டதாக தொழிற்சங்க தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

நாட்டை ஆட்சி செய்வதில் எவ்வித நோக்கமும் இல்லாதபோது, சரியான திட்டமிடல் மற்றும் இலக்குகளுடன் பொது சேவையை பராமரிக்க முடியாதபோது, வீழ்ச்சி அடைந்து வரும் தேசிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்மொழிய முடியாத நிலையில், கட்டாயத்தின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரியுடன் அரசாங்கங்கத்தை இணைக்க முயற்சிப்பது நீதி அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு அல்ல என்பதை தாம் அறிவோம் என, பெப்ரவரி முதலாம் திகதி செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் ஊடாக தொழிற்சங்கத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வளர்ந்து

எவ்வாறாயினும், மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்து ஜனநாயக சமூக வெளிகளை முடக்கும் ஆட்சிக்கு சட்டம் இயற்றுவது இந்த அரசாங்கத்தின் "சுபீட்சத்தின் நோக்கின்" ஒரு பகுதியல்ல என்பதை தொழிற்சங்க தலைவர்கள் நீதி அமைச்சர் சப்ரிக்கு நினைவூட்டியுள்ளனர்.

"வேலைநிறுத்த உரிமை மற்றும் கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமை ஆகியவை உலகளாவிய உரிமைகளாகும். மேலும் ஒரு நாடாக நாம் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மாத்திரமல்ல, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எண் 87 மற்றும் 98 ஆகிய பிரகடனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் அவர்களின் உரிமைகளுக்குக் கட்டுப்பட்டுள்ளோம். மேலும் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக சமூக வெளி ஆகியவற்றைப் பாதுகாக்கத் தவறியதால் இழந்த ஐரோப்பிய ஜிஎஸ்பி சலுகைகளை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணங்கிய அனைத்தையும் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்ததால் 2017ஆம் ஆண்டில் மீளப் பெற்றுக்கொள்ள முடிந்தது.”

தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 தொழிற்சங்கங்கள் சார்பாக அறிக்கையில் கையெழுத்திட்ட சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், நீதி அமைச்சரின் ஜனநாயக விரோதப் பிரேரணைகள் வெறுமனே அரச ஊழியர்களை மாத்திரம் இலக்கு வைக்கவில்லை என வலியுறுத்தினார்.

“நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் இல்லாதபோது, திட்டம் இல்லாதபோது, தொழிலாளர்களின் உரிமைகளை ஒழிப்பது அவர்களுக்குப் பொருந்துவதோடு அது பொது சேவைகளில் இருந்து ஆரம்பிக்கிறது. அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்ட சேவைப் பகுதிகளில் இது மிகவும் தெளிவாக உள்ளது. தனியார் துறை ஊழியர்களையும் மக்களையும் அவர்களது அடிப்படை வாழ்வுரிமைக்கான தீர்வுகளைக் கோரும் நிலைக்குத் தள்ளும் அதேவேளையில், அமைப்பு மற்றும் கோரிக்கைக்கான கூட்டு உரிமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையின் தொடக்கமாக இது இருக்கும்.”

இந்த நாட்டில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர் மக்களுக்கு பொறுப்புக் கூறாமல் இருந்தாலும், 69 இலட்சம் மக்களுக்காக தீர்மானங்களை மேற்கொள்ளாது 22 மில்லியன் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதே அதிகாரத்திற்கு வந்த அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பு என்பதை உழைக்கும் மக்களின் தொழிற்சங்கத் தலைமை அமைச்சருக்கு நினைவூட்டுகிறது.

“எனவே, நாளுக்கு நாள் சரிந்து வரும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வுக்கான தேசிய திட்டத்தை உடனடியாக முன்வைப்பதற்கு பதிலாக, ஜனநாயக சமூகத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை ஒழிப்பதற்கான முன்மொழிவுகளை முன்வைத்தமைக்காக, சுயமரியாதை இருந்தால் மக்களிடம் மன்னிப்பு கேட்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்.”

அமைச்சரின் வெட்கக்கேடான பிரேரணைகளை உடனடியாக மீளப்பெறக் கோரி அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பொதுப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்வரும் தொழிற்சங்கங்கள் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இலங்கை சுதந்திர தொழிற்சங்க சம்மேளனம், நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தோட்ட சேவைகள் சங்கம், தொழிலாளர்களின் ஐக்கிய கூட்டமைப்பு, இலங்கை வங்கி ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி