குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? இந்தியா விமானம் கடந்த

மாதம் 12ஆம் திகதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியாகினர். மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக் கட்டிடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19 பேர் பலியாகினர்.

இதன்படி அந்த விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை (ஜூலை12ம் தேதி) நள்ளிரவு வெளியானது. இதன்படி விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன..? இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளது. சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின்களில் எரிபொருள் விநியோகம் தடைபட்டது. இதனால் என்ஜின்களின் சக்தி குறைந்தது. விமானி ஒருவர் மற்ற விமானியிடம், "ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள்?" என்று கேட்டதாகப் பதிவாகி உள்ளது. அதற்கு மற்ற விமானி, "நான் அப்படி எதுவும் செய்யவில்லை" என்று பதில் அளித்துள்ளார்

விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களும் கண்டுபிடிக்கப்பட்டு விமான நிலையத்தின் ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளன. முக்கியமான பாகங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. என்ஜின் 1 தானாகவே மீண்டும் இயங்க முயற்சித்தது. அது வெற்றிகரமாக இயங்கியது. ஆனால் என்ஜின் 2-வை மீண்டும் இயக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. விமானத்தில் மின்சாரம் தடைபட்டதால், அவசரகால மின்சக்தி ஆதாரமான ராம் டர்பைன் (RAT) தானாகவே இயங்கியது.

விமானம் புறப்படும்போது இறக்கை மற்றும் தரையிறங்கும் சக்கரங்கள் சரியான நிலையில் இருந்தன. ஆனால் விபத்துக்குப் பிறகு எரிபொருள் கட்டுப்பாட்டு கருவிகள் அணைந்த நிலையில் இருந்தன. இதன் மூலம் விமானம் நடுவானில் பறக்கும்போது எரிபொருள் தடைபட்டது உறுதியாகிறது.

விமானத்தை முறையாகப் பராமரித்துள்ளார்களா என்பதை அறிய, விமானப் பராமரிப்புப் பதிவுகளை ஆய்வு செய்தார்கள். அதன்படி, விமானத்தில் கடைசியாக L1-1 மற்றும் L1-2 ஆகிய பெரிய பராமரிப்புப் பணிகள் 38,504:12 மணி நேரங்களுக்கு முன்பும், 7,255 முறை விமானம் இயக்கப்பட்ட பின்பும் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த பெரிய பராமரிப்புப் பணி (D-check) டிசம்பர் 2025-ல் செய்யப்பட இருந்தது. இடது பக்க என்ஜின் (ESN956174) மே 1, 2025 அன்றும், வலது பக்க என்ஜின் (ESN956235) மார்ச் 26, 2025 அன்றும் நிறுவப்பட்டன.

விபத்து நடந்த அன்று, விமானத்தில் நான்கு Category 'C' Minimum Equipment List (MEL) குறைபாடுகள் இருந்தன. இவை ஜூன் 9, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஜூன் 19, 2025 வரை அவை சரி செய்யப்படாமல் இருந்தன. விமானத்தின் கதவு கண்காணிப்பு கேமரா, விமான நிலைய வரைபடம், கம்ப்யூட்டர் நெட்வேர்க் மற்றும் விமானத்தில் இருந்த பிரிண்டர் ஆகியவை பழுதடைந்திருந்தன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி