ராகம மருத்துவ பீடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மருத்துவ மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 9 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வத்தளை நீதவான் ஹெஷான் டி மெல் இன்று (07) உத்தரவிட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்கள் உட்பட ஒன்பது சந்தேக நபர்களில் 7 பேர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களில் இருவர் இன்று (07) அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபர் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளானதாலும் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பில் அவர்களது சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், முன்வைக்கப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகளை சமரச சபைக்கு அனுப்பி தீர்வுகாண முடியும் எனத் தோன்றுவதாக நீதவான் தெரிவித்தார்.

கோவிட் நிலை மற்றும் சந்தேக நபர்கள் அனைவரும் சிறார்களாகக் கருதப்பட்டு, கடுமையான ஜாமீன் நிபந்தனைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம்!

ராகம மருத்துவ பீட விடுதிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியதாக தனது மகன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பின் பிரகாரம்.

எவ்வாறாயினும், அருந்திக பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அருந்திக பெர்னாண்டோவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு விசுவாசமான தேரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவுக்கு மீண்டும் அரச அமைச்சு வழங்க வேண்டாம் எனவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி