1200 x 80 DMirror

 
 

பொய்யான தகவல்களை வழங்கி, கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற பொலிசார் முயற்சித்துள்ளனர்.

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தன்று ஊடகவியலாளர் புண்யமூர்த்தி சசிகரனின் வீட்டிற்கு பிரதம பரிசோதகர் ஒருவர் சீருடையில் வந்துள்ளார். அன்று இல்லாத போராட்டம் ஒன்றைக் காண்பித்து, அதற்கு தடையுத்தரவைப் பெற்றுள்ளதாக குறித்த பொலிஸ் அதிகாரி ஊடகவியலாளருக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையின் 74வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பல அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மகாத்மா காந்தி பூங்கா வரை பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அரசாங்க உளவுத்துறைக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை நீதிமன்றத்திற்கு வழங்கி பொலிசார் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

எனினும், அன்றைய தினம் மாலை வரை மட்டக்களப்பில் அவ்வாறானதொரு போராட்டம் நடத்தப்பட்டதாக தமக்கு தகவல் கிடைக்கவில்லை என மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் இவ்வாறான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டுமென மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாளர் புண்ணிமூர்த்தி சசிகரன், இந்த செய்திகளை அறிக்கையிடுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவை பொலிசார் பெற்றிருந்தனர்.

பெப்ரவரி 3, 2021 அன்று பொத்துவிலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்ட P2P என பெயரிடப்பட்ட ஐந்து நாள் தொடர் போராட்டம் தொடர்பில், புண்ணியமூர்த்தி சசிகரன் செய்தி வெளியிடுவதைத் தடுக்கும் வகையில், 12 நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக பொலிஸார் தடை உத்தரவை கோரியுள்ளனர்.

அத்துடன், ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் கடந்த காலங்களில் பல தடவைகள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஊடகவியலாளர் அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதை வன்மையாகக் கண்டித்திருந்தது.

புலனாய்வுப் பிரிவினர் ஊடகவியாளரைக் கண்காணித்து, பொலிசாருக்கு வழங்கும் தகவல்களுக்கிடைய இந்தத் தடைகள் பெறப்படுவதாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி