செய்திகள்
Showing page 988 of 1201 (18,013 articles)

ஜனாதிபதியின் மரணச் சான்றிதழ் வழங்கும் கருத்து கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கூட்டரேஷிற்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, இலங்கை தமிழர் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், யுவதிகள் மயங்கி விழுந்துள்ளர்!
புத்தளத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், யுவதிகள் திடீரென மயங்கி விழுந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூத்த ஊடகவியலாளர் அந்தோனி மார்க் கொவிட் தொற்றால் மரணம்!
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசிய பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 80ஆவது வயதில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவிசெய்யப்பட்டுள்ளார்!
வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, ஒரு மேலதிக வாக்கினால் வெற்றிபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.

எங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி வேண்டும்! தாலிபன்கள்
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தாலிபன்கள், ஐநா சபையில் பேச, ஐநாவிடமே முறையாக அனுமதி கேட்டு கடந்த திங்கட்கிழமை கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்கள்.

இமதுவ பிரதேச சபை அமர்வில் மதுபான போத்தலுடன் கலந்து கொண்ட உறுப்பினர்!
காலி மாவட்டத்தின், இமதுவ பிரதேசசபை அமர்வில், பொம்மை, வெற்று பால் புட்டி, மதுபான போத்தலுடன் பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் ஏன் தற்கொலைக்கு முயன்றனர்!
தமிழ்நாட்டில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் உள்ள அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 29 இலங்கைத் தமிழர்கள் கடந்த மாதம் பாரிய தற்கொலை முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தலைவர்களை சிஐடிக்கு அழைப்பது 'அரசின் சூழ்ச்சி'!
இலங்கையில் கடந்த இரண்டரை மாதங்களாக தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆசிரியர்களை குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) விசாரணைக்கு அழைத்தமை அரசாங்கத்தின் சூழ்ச்சி என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“இலங்கையில் செய்ய முடியாத“ போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு பிணை!
பொதுமக்களின் போராட்டங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி அறிவித்த நிலையில், இலங்கையில் போராட்டங்களை நடத்த முடியாது எனக் கூறி கைது செய்யப்பட்ட இரண்டு சிறு வர்த்தகர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வருகையில் அரசாங்கம் முன்னணியில்!
அரசாங்கம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் வருகையில் எதிர்க்கட்சிகளை தோற்கடித்து ஆளும் கட்சி முன்னிலைப் பெற்றுள்ளது.

நீதி கேட்டவர்களின் விசாரணை ஒக்டோபர் 5ம் திகதி வரை 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
கல்வி தனியார்மயத்திற்கும், ராணுவமயத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தமையால் சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பிணை கோரி ஹோமகம உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒக்டோபர் 5ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

லொஹான் ரத்வத்தவை ஏன் கைது செய்ய வில்லை! சிறிதரன்
மதுபோதையில் கைத்துப்பாக்கியுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த லொஹான் ரத்வத்தவை இதுவரையில் கைது செய்யப்படாதது ஏன்? எனக் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் புட்டின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி வெற்றி!
ரஷ்யாவில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி Vladimir Putin கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது.

இந்தியாவின் புதிய கலாச்சாரத் தூதுவராக யொஹானி!
இலங்கை யுவதியான யொஹானியின் (Yohani Diloka de Silva) மெனிக்கே மகே ஹிதே பாடல் தற்போது உலகளவில் மிகவும் பரவலாக பேசும் இடத்தை பிடித்துள்ளது.

புராதன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தின் மீது இடி விழுந்துள்ளது!
பொலன்நறுவையில் அமைந்துள்ள புராதன லங்காதிலக்க புத்தர் சிலை அமைந்துள்ள இடம் இடி விழுந்து சேதமடைந்துள்ளது.

