Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஆசிரியர் தலைவர்களை சிஐடிக்கு அழைப்பது 'அரசின் சூழ்ச்சி'!

T

The Leader Desk

செப்டம்பர் 21, 2021 • 5:25 PM

ஆசிரியர் தலைவர்களை சிஐடிக்கு அழைப்பது 'அரசின் சூழ்ச்சி'!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆசிரியர்-அதிபர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி அனைத்து ஆசிரிய, அதிபர்களும் 2021 ஜூலை 12 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இது தற்போது 71 நாட்களாக தொடர்கின்றது.
  • இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதியான இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட, இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் மோகன பராக்கிரம வீரசிங்க மற்றும் சுதந்திர கல்வி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவரும், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் அங்கு இருந்துள்ளனர்.
  • செப்டெம்பர் 16ஆம் திகதி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும், பொது கல்வி ஊழியர் சங்கங்கத்தின் சில உறுப்பினர், அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு செய்திருந்தனர்.
  • இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் 119 அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அன்றைய தினமே ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

ஆசிரியர்-அதிபர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி அனைத்து ஆசிரிய, அதிபர்களும் 2021 ஜூலை 12 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இது தற்போது 71 நாட்களாக தொடர்கின்றது.

இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதியான இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட, இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் மோகன பராக்கிரம வீரசிங்க மற்றும் சுதந்திர கல்வி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவரும், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் அங்கு இருந்துள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பதானது, ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் பொதுக் கல்வி ஊழியர் சங்கத்தின், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடம்பெறும் ஒரு சூழ்ச்சியென  ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

செப்டெம்பர் 16ஆம் திகதி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும், பொது கல்வி ஊழியர் சங்கங்கத்தின் சில உறுப்பினர், அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு செய்திருந்தனர்.

அதன்பின்னர், செப்டெம்பர் 17ஆம் திகதி, அமைச்சர் சரத் வீரசேகர ஊடக சந்திப்பை நடத்தி, ஆசிரியர் - அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஒரு பயங்கரவாத செயல் எனவும்,  வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுத் தொடர்பில் தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இதுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் 119 அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அன்றைய தினமே ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகளை அடுத்து, அதிபருக்கும் ஆசிரியருக்கும் செப்டெம்பர் 18ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருமாறு வருமாறு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.

"அவர்கள் இன்றைய தினம் வரமுடியும் என அறிவித்துள்ளனர். பின்னர் பொலிஸார் அவர்களது வீடுகளுக்கு சென்று அறிவித்தல் விடுத்துள்ளனர்.  இதற்கமையஅவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டனர்."

”தொழிற்சங்க விதிமுறைகளுக்கு அமைய, ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தெரிவிக்க சட்டப்பூர்வ உரிமை உள்ளது. மேலும் அனைத்து ஆசிரியர்களின் அதிபர்களும் தாமாக முன்வந்து தொழிற்சங்க நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.” என செப்டெம்பர் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜோசப் ஸ்டாலின் மற்றும் மஹிந்த ஜயசிங்க, இரண்டு சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து விமர்சிக்கும் பொது கல்வி ஊழியர் சங்கத்தின், அரசின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியின் விளைவால், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள, ஆசிரியர் சங்கத் தலைவர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் அமைச்சர் சரத் வீரசேகரவிடம் முறைப்பாடு செய்வதன் ஊடாக இது தெளிவாவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற சூழ்ச்சிகளால் ஆசிரியர்களின் முதன்மை போராட்டத்தை நிறுத்தவோ அல்லது ஆசிரியர், அதிபர்களை அச்சுறுத்தவோ முடியாது என வலியுறுத்தியுள்ள  ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு, ”இத்தகைய நாடகங்களை நிறுத்தி” ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் நியாயமான தீர்வை முன்வைக்குமாறு கோரியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...