Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி வேண்டும்! தாலிபன்கள்

T

The Leader Desk

செப்டம்பர் 22, 2021 • 6:32 AM

எங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி வேண்டும்! தாலிபன்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி இதை வலியுறுத்தி ஐநாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  • ஆனால் இக்குழு, அடுத்த திங்கட்கிழமை (செப்டம்பர் 27) ஐநா சபை கூட்டங்கள் நிறைவடையும் வரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
  • எனவே அதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகள் படி குலாம் இசக்சாயே ஆப்கானிஸ்தானுக்கான ஐநாவின் தூதராக தொடர்வார்.
  • குலாம் இசக்சாய் செப்டம்பர் 27ஆம் தேதி ஐநாவில் ஒரு உரையாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்து அளவு:

தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி இதை வலியுறுத்தி ஐநாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நியூயார்க் நகரத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பேச தாலிபன் அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாக தாலிபன் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை, ஐநாவின் கமிட்டி ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள்.

அக்கமிட்டியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இக்குழு, அடுத்த திங்கட்கிழமை (செப்டம்பர் 27) ஐநா சபை கூட்டங்கள் நிறைவடையும் வரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

எனவே அதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகள் படி குலாம் இசக்சாயே ஆப்கானிஸ்தானுக்கான ஐநாவின் தூதராக தொடர்வார். குலாம் இசக்சாய் செப்டம்பர் 27ஆம் தேதி ஐநாவில் ஒரு உரையாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தாலிபன்களோ, அவரின் நோக்கம் ஆப்கானிஸ்தானை பிரதிபலிக்காது என கூறியுள்ளனர்.

மேலும், தாலிபன் சுஹைல் ஷாஹீனை ஆப்கானிஸ்தானுக்கான ஐநா தூதராகவும் பரிந்துரைத்துள்ளது. முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதி, ஆப்கனின் உண்மையான பிரதிநிதி அல்ல எனவும் தாலிபன்கள் கூறியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...