செய்திகள்
Showing page 949 of 1201 (18,013 articles)

12 வருடகாலம் மனித உரிமை பேரவைக்குள் எந்த ஒரு தீர்வும் காணமுடியாத நிலையில்தான் தள்ளப்பட்டு இருக்கின்றது! சிவசக்தி ஆனந்தன்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லாமல் இருந்தால் பகிரங்கமாக அரசாங்கம் மன்னிப்பை கோரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பழைய சிலிண்டர் லேபலின் மேல் புதிய லேபல்!
எரிவாயு சிலிண்டர்களின் தரம் சம்பந்தமான பிரச்சினைகளும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்த கையோடு பாவனையாளர் அதிகார சபை தலையிட்டு லேபலொன்றை அறிமுகப்படுத்தியமையானது எரிவாயு நிறுவனங்களின் இலாபத்தை மறைக்கும் உபாயமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகிறது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

கூட்டமைப்பினர் சுவிஸ் நாட்டு தூதுவரை சந்தித்தனர்!
சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் வர்கலர் மற்றும் அரசியல் துறை செயலாளர் சிடோனியா கபிரியல் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரியந்தவின் படுகொலை "இஸ்லாத்துக்கு எதிரானது", பாகிஸ்தானிய இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவிப்பு!
இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன கொடூரமான கூட்டு சித்திரவதை செய்து படுகொலை செய்தமையை, பாகிஸ்தானில் உள்ள முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் கண்டித்துள்ளதோடு, இது "இஸ்லாமுக்கு எதிரான" செயல் மற்றும் "சட்டத்திற்கு புறம்பான கொலை" எனவும் அறிவித்துள்ளதோடு, வெள்ளிக்கிழமையை "கண்டன நாள்" என அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இணைந்த டயானா இன்னும் சஜித்தின் கட்சி உபசெயலாளர்!
சமகி ஜன பலவேகயவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பாய்ச்சல் பற்றி மைத்திரிபாலவிடமிருந்து ஒரு குறிப்பு!
இந்த நாட்டின் அரசியலில் நேர்மையான, ஊழல் செய்யாத, மோசடி செய்யாத மற்றும் தேசபக்தியுள்ள மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் பரந்த வலிமைமிக்க படையொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை வீதியின் 99ஆம் கட்டை சந்தியில் பெற்றோல் கடை தீப்பற்றியது!
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி -திருகோணமலை வீதியின் 99ஆம் கட்டை சந்தியில் பெற்றோல் கடையொன்று, இன்று (09) மதியம் தீப்பற்றிக்கொண்டது.

பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரி டக்ளஸ்! கருத்தை மீளப்பெற வேண்டும் கரைச்சி பிரதேசபை
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் 7 கட்சிகளை சேர்ந்த 35 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

வடமேல்மாகாண ஆளுநராக வசந்த கரனாகொட! அவரைப்பற்றி மனோவின் கருத்து
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட வடமேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என வெளியான செய்திகள் குறித்த தனது கரிசனையை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் அவர் பதிவில்.

அடுத்து வெடிக்கிறது திரவ உரக் கொள்கலன்கள்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை திரவ உர கொள்கலன்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அநுராதபுரம் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் இருந்து இந்த அறிக்கை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நத்தாருக்கு கட்டுப்பாடு வருமா! கொவிட் தொற்று அதிகரிப்பு
நேற்று (08) மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் நாடு திவாலாகும்!
ஜனவரிக்குள், நாட்டின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு 140 மில்லியன் டொலர் மீதமாக இருக்கும் என சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவிஞருக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் 18 மாதங்கள் எடுத்துள்ளார்!
கவிதை எழுதியதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவிஞருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என தெரிவிக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு 18 மாதங்களுக்கு மேலாகியுள்ளது.

பாஜகவின் குரலில் பேசியதாக விமர்சிக்கப்பட்ட ராணுவ அதிகாரி பிபின் ராவத்!
இந்திய பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரியான முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் புதன்கிழமை அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

