Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

12 வருடகாலம் மனித உரிமை பேரவைக்குள் எந்த ஒரு தீர்வும் காணமுடியாத நிலையில்தான் தள்ளப்பட்டு இருக்கின்றது! சிவசக்தி ஆனந்தன்

T

The Leader Desk

டிசம்பர் 10, 2021 • 4:49 PM

12 வருடகாலம் மனித உரிமை பேரவைக்குள் எந்த ஒரு தீர்வும் காணமுடியாத நிலையில்தான் தள்ளப்பட்டு இருக்கின்றது! சிவசக்தி ஆனந்தன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வவுனியாவில் காணாமல் போன உறவினர்களால் இன்று மேற்கொள்ளப்பட்ட தீப்பந்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • இந்த 12 வருடகாலத்திலே போரால் பாதிக்கப்பட்டு இருக்ககூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், நில அபகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த 12 வருடகாலமும் இவ் மனித உரிமை பேரவைக்குள் எந்த ஒரு தீர்வும் காணமுடியாத நிலையில்தான் தள்ளப்பட்டு இருக்கின்றது.
  • காணாமல் ஆக்கபட்டு இருக்கும் உறவுகள் இன்றைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உறவினர்களை இழந்திருக்கின்றார்கள் ஆகவே அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.
எழுத்து அளவு:

வவுனியாவில் காணாமல் போன உறவினர்களால் இன்று மேற்கொள்ளப்பட்ட தீப்பந்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கபட்டு இருக்கும் உறவுகள் இன்றைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உறவினர்களை இழந்திருக்கின்றார்கள் ஆகவே அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லாமல் இருந்தால் பகிரங்கமாக அரசாங்கம் மன்னிப்பை கோரவேண்டும் அதற்கு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கான ஒரு நிலமைக்கு செல்வதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு ஒரு முழுமையான ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்கள் தங்களுடைய உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த 12 வருடகாலத்திலே போரால் பாதிக்கப்பட்டு இருக்ககூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், நில அபகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த 12 வருடகாலமும் இவ் மனித உரிமை பேரவைக்குள் எந்த ஒரு தீர்வும் காணமுடியாத நிலையில்தான் தள்ளப்பட்டு இருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்கள் நீண்டகாலமாக தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மனித உரிமை பேரவையில் எதிர்பார்த்திருந்தது ஏமாற்றமாக இருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுடைய இந்த பிரச்சினையை வெறுமனமே சிறுபான்மைகுழுக்கள் என்று இந்த மேற்குலக நாடுகள் அதற்கு குறுகிய வட்டத்திற்குள் இதை நோக்குகின்ற நிலமை இருக்கின்றது.

அது தொடர்ந்து நீடிக்கப்படாமல் இருக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகம் இந்த போர் பாதிப்பால் ஏற்பட்டு இருக்கின்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான ஒரு அளுத்தத்தை பிரயோகிப்பதற்கான ஒரு காலகட்டம் வந்திருக்கின்றது எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.          

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...