Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வடமேல்மாகாண ஆளுநராக வசந்த கரனாகொட! அவரைப்பற்றி மனோவின் கருத்து

T

The Leader Desk

டிசம்பர் 9, 2021 • 9:04 AM

வடமேல்மாகாண ஆளுநராக வசந்த கரனாகொட! அவரைப்பற்றி மனோவின் கருத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட மீது இறுதி யுத்தம் நடந்த 2008 மற்றும் 2009 காலத்தில் கொழும்பில் வசதி படைத்த தமிழ் குடும்ப இளைஞர்கள் 11பேரை கப்பம் பெறுவதற்காக வெள்ளை வேன் மூலம் கடத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நடந்தது.
  • மற்றும் 2009 வேளையில் எனது தலைமையிலான “மக்கள் கண்காணிப்பு குழு” இந்த கொடுமையை பதிவு செய்து உலகிற்கு அறிவித்தது.
  • இவ்வாறான நிலையில் கடந்த 2019ம் வருடத்தில் சட்டபூர்வமாக வசந்த கரனாகொட மீது சாட்டப்பட்ட இந்த குற்றச்சாட்டு மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.
எழுத்து அளவு:

என்ன ஒரு அற்புத தேசம்! என்ன ஒரு அற்புத ஆட்சி! முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட மீது இறுதி யுத்தம் நடந்த 2008 மற்றும் 2009 காலத்தில் கொழும்பில் வசதி படைத்த தமிழ் குடும்ப இளைஞர்கள் 11பேரை கப்பம் பெறுவதற்காக வெள்ளை வேன் மூலம் கடத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நடந்தது.

2008 மற்றும் 2009 வேளையில் எனது தலைமையிலான “மக்கள் கண்காணிப்பு குழு” இந்த கொடுமையை பதிவு செய்து உலகிற்கு அறிவித்தது. இதற்காக எனக்கும் அச்சுறுத்தல் பரிசாக கிடைத்தது. “வந்து சுட்டு விட்டு போங்கடா” என நான் சொன்னேன்.

கடத்தப்பட்ட இளைஞர்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை. காணாமல் போன பிள்ளைகளின் தாய்மார்கள் அழுத அழுகை இன்னமும் என் நெஞ்சில் ஒலிக்கிறது. அன்றைய போராட்டங்கள் மனதில் நிழலாடுகின்றன.

 

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட மீது, இறுதி யுத்தம் நடந்த 2008, 2009 காலத்தில், கொழும்பில் வசதி படைத்த தமிழ் குடும்ப இளைஞர்கள் 11பேரை, கப்பம் பெறுவதற்காக, வெள்ளை வேன் மூலம் கடத்தி, கொலை செய்ததாக, குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு நடந்தது.

கொழும்பு எம்பியாக மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளராக - நான் மற்றும் ரவிராஜ் சிறிதுங்க விக்கிரமபாகு பிரியாணி ஆகியோர் அச்சறுத்தல்களுக்கு மத்தியில் பலரை காப்பாற்றினோம். பல கடத்தல்களை தடுத்து நிறுத்தினோம். எம்மையும் மீறி பல நடந்தன.

வெள்ளை வான் கடத்தல்கள் அரசியல் காரணங்களுக்காக ஆரம்பித்து இது போன்ற கப்பம் பெறவேண்டி நிகழ்ந்தன. இவ்வாறான நிலையில் கடந்த 2019ம் வருடத்தில் சட்டபூர்வமாக வசந்த கரனாகொட மீது சாட்டப்பட்ட இந்த குற்றச்சாட்டு மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.
 

இன்று இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின் கடந்த மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகளையும் வழக்கையும் சட்டமா அதிபர் வாபஸ் பெற்றார். அதன்பின்னர் இந்த ஆட்சியில் கரனாகொட சுதந்திர மனிதனாக வெளியே வந்தார்.

இன்று அவரது “சாதனையை” பாராட்டி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன என அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...