செய்திகள்
Showing page 933 of 1201 (18,014 articles)

வர்த்தக வலய ஊழியர்கள் எரிபொருள் நிவாரணம் கோருகின்றனர்!
எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென பெண்கள் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

பயணிகளுக்கு போதிய ரயில்கள் இல்லை, உள்ளுக்குள் குற்றச்சாட்டு!
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் சேவைகளை முன்னறிவிப்பின்றி இரத்து செய்வதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் மீது அதன் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்! விக்னேஸ்வரன்
தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சேர்ந்தால் மற்றும் எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது நிகழ்ச்சிநிரல் ஒன்றில் சேர்ந்தால் தேசியக் கட்சிகளும் ஜே.வி.பி யும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் முதன்முறையாக முத்தமிழ் விழா!
யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கூழாவடி புகையிரத கடவைக்கு காவலரை நியமிக்குமாறு கோரிக்கை!
மட்டக்களப்பு - கூழாவடி பகுதியில் உள்ள புகையிரதக் கடவை கடந்த சில வாரங்களாக திறந்த வண்ணமே காணப்படுவதால் பல விபத்துக்கள் மற்றும் மக்களின் உயிர் போகும் நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆவணம் தமிழ் மொழியில் இருந்தால் மட்டுமே கையெழுத்திடுவேன்! மனோ
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும்

தற்போது உள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பலன் தராது!
உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 30 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 5 தமிழ் கைதிகள் விடுதலை!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 05 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சம்பிக்கவிற்கு சுகயீனம்! அறிக்கை கோருகிறது நீதிமன்றம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்கவின் விரிவான மருத்துவ பரிசோதனை அறிக்கையை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 ஆம் திகதி மங்களவுக்கு அதிஉயர் சபையில் அனுதாபம்
இலங்கை அரசியலில் ஆட்சியை உருவாக்கக்கூடிய பெரும் புள்ளியாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டரிசி 105 ரூபா என்கின்றது அரசாங்கம்!இப்போது 200 ரூபாவை அண்மித்துள்ளது!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபாவை அண்மித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மாட்டு வண்டிகளில் மண்ணெண்ணெய் விற்பனை நாடு எங்கே செல்கிறது!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு நிலையில், அதனை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் நீண்ட வரிசையில் கால் வலிக்க காத்து கிடக்கின்றனர்.

கொவிட் வரவில்லை என்றால், "ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும்"!
வெளிநாட்டு கையிருப்பு குறைவினால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையில் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பொலிஸாருக்கு இந்தி மொழி எதற்காக?
இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.

சிறிசேன தொடர்பான நான்கு கோப்புகள் என்னிடம் இருக்கிறது! ரவி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பான நான்கு கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவை தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் விடுப்பதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (11) தெரிவித்தார்.

