Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தற்போது உள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பலன் தராது!

T

The Leader Desk

ஜனவரி 12, 2022 • 9:15 AM

தற்போது உள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பலன் தராது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
  • இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 38 லட்சத்து 59 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
  • கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 16 லட்சத்து 14 ஆயிரத்து 196 பேர் குணமடைந்துள்ளனர்.
  • ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 20 ஆயிரத்து 604 பேர் உயிரிழந்துள்ளனர்.
எழுத்து அளவு:

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 38 லட்சத்து 59 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 67 லட்சத்து 24 ஆயிரத்து 893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 16 லட்சத்து 14 ஆயிரத்து 196 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 20 ஆயிரத்து 604 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 3.59 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கொரோனா வைரசின் உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் வைரஸ்களும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி வந்தன. ஆனால் கொரோனா வைரஸ் உருமாருமாறி மக்களை பாதிப்பதால் பல நாடுகள் 3-வது தவணை தடுப்பூசியை, பூஸ்டர் தடுப்பூசி என செலுத்தி வருகின்றன. இந்தியாவிலும் முதியோர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உருமாறிய கொரோனா வைரஸ்களை தடுக்க 4-வது தவணை தடுப்பூசியை அறிமுகம் செய்வது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றன.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் அனைத்து நாடுகளும் ஏற்கனவே 2 தவணை செலுத்திய தடுப்பூசியையே 3-வது தவணையாகவும் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளையே மீண்டும் பயன்படுத்துவது  பலன் தராது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து ஆராயும் உலக சுகாதார மையத்தின் நிபுணர்கள் கூறியதாவது:-

ஏற்கனவே செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தும் திட்டம் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பலன் தராது.

முதற்கட்ட தரவுகள் தற்போது பயனில் உள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தீர்க்கமாக செயல்படவில்லை என கூறுகின்றன. இதனால் தான் ஒமைக்ரான் காட்டுத்தீயை போல பரவி வருகிறது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களையும் ஒமைக்ரான் பாதிக்கிறது.

நோய் தொற்றுக்கு ஆளானவர்களை தீவிர பாதிப்பு, இறப்பில் இருந்து காப்பாற்றுவது மட்டும் இல்லாமல், நோய் தொற்று முதலில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதையே தடுக்கும் தடுப்பூசிகள் தான் நமக்கு தேவை. அவற்றை தான் நாம் உருவாக்க வேண்டும்.

அதுபோன்ற தடுப்பூசிகள் நமக்கு கிடைக்கும் வரை,  தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும், அவை ஒமைக்ரான் மற்றும் எதிர்கால மாறுபாடுகளுக்கு எதிராக உலக சுகாதார மையம் பரிந்துரைத்த அளவிலான பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தற்போது உள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பலன் தராது! | Tamil Leader | We Lead the Nation