Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
விளையாட்டு

14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூரியவன்ஷி!

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2025 • 1:10 PM

14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூரியவன்ஷி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்றைய தினம் (28) 17 பந்துகளில் அரைசதம், 35 பந்துகளில் சதம் அடித்து ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டு சென்ற வைபவ் சூரியவன்ஷி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் சமஸ்திபூர் மாவட்டத்தில் மோதிபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வைபவ் சூரியவன்ஷி ஒரு விவசாயின் மகன் ஆவார்.
  • கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி சூர்யவன்ஷி பிறந்துள்ளார்.
  • சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள வைபவ் சூரியவன்ஷி எட்டு வயதிலேயே மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிக்கு சூர்யவன்ஷி தேர்வாகியுள்ளார்.
எழுத்து அளவு:

நேற்றைய தினம் (28) 17 பந்துகளில் அரைசதம், 35 பந்துகளில் சதம் அடித்து ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டு சென்ற வைபவ் சூரியவன்ஷி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் சமஸ்திபூர் மாவட்டத்தில் மோதிபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வைபவ் சூரியவன்ஷி ஒரு விவசாயின் மகன் ஆவார்.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி சூர்யவன்ஷி பிறந்துள்ளார். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள வைபவ் சூரியவன்ஷி எட்டு வயதிலேயே மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிக்கு சூர்யவன்ஷி தேர்வாகியுள்ளார்.

கடந்த 2023-24 ரஞ்சிக் கோப்பை தொடரில் பீகார் அணிக்காக 12 வயது 284 நாட்கள் ஆகியிருந்தபோது வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகி விளையாடினார்.

வினூமன்கட் கோப்பையில் பங்கேற்ற சூர்யவன்ஷி 5 இன்னிங்ஸ்களில் 96 ஓட்டங்களை விளாசினார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான சாலஞ்சர் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, பங்களாதேசிற்கு எதிராக இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார்.

vaibha.webp

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...