Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
விளையாட்டு

பெங்களூரு நெரிசல் சம்பவம் தொடர்பில் விராட் கோலி மீது பொலிஸில் முறைப்பாடு!

T

The Leader Desk

ஜூன் 7, 2025 • 6:04 AM

பெங்களூரு நெரிசல் சம்பவம் தொடர்பில் விராட் கோலி மீது பொலிஸில் முறைப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விராட் கோலி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
  • வெங்கடேஷ் என்ற சமூக ஆர்வலர் ஒருவர், சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் விராட் கோலி மீது புகார் அளித்துள்ளார்.
  • முன்னதாக நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்தது.
எழுத்து அளவு:

விராட் கோலி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த எச்.எம். வெங்கடேஷ் என்ற சமூக ஆர்வலர் ஒருவர், சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் விராட் கோலி மீது புகார் அளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கப்பன் பார்க் போலீசார், புகார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும், விசாரணையின் போது அது சரிபார்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்தது.

- Hindu

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...