Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
விளையாட்டு

18 வருட கனவை நனவாக்கிய கோலிக்கு குவியும் வாழ்த்து மழை!

T

The Leader Desk

ஜூன் 4, 2025 • 2:11 AM

18 வருட கனவை நனவாக்கிய கோலிக்கு குவியும் வாழ்த்து மழை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (3.06.2025) இரவு நடைபெற்றது.
  • இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பு 190 ரன்களை குவித்தது.
  • பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார்.
  • ராஜ் பட்டிதார் 26 பந்துகளில் 16 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டன் 15 பந்துகளில் 25 ரன்களையும் எடுத்தனர்.
எழுத்து அளவு:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (3.06.2025) இரவு நடைபெற்றது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பு 190 ரன்களை குவித்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார். ராஜ் பட்டிதார் 26 பந்துகளில் 16 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டன் 15 பந்துகளில் 25 ரன்களையும் எடுத்தனர். எனவே பஞ்சாப் அணி வெற்றி பெற 191 ரன்களை பெங்களூரு அணி இலக்காக நிர்ணயித்தது.

அதனைத் தொடர்ந்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. இருப்பினும்  பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184  ரன்களை எடுத்து தோல்வி அடைந்துள்ளது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சாசாந்த் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். ஜோஷ் இங்லீஸ் 23 பந்துகளில் 39  ரன்களை குவித்தார். அதே போன்று பிரப் சிம்ரன் சிங்  22 பந்துகளில் 26  ரன்களையும் குவித்தார்.

இதன் மூலம் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025 சீசனின் சம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி வென்றதையொட்டி அந்த அணிக்கு, விராட் கோஹ்லிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,

“சிறப்பான ஆட்டம் ஆர்சிபி, ஆச்சர்யங்கள் நிறைந்த ஒரு சீசனில் ஒரு திரில் ஆன முடிவு. விராட் கோஹ்லி, இந்த கனவை நீங்கள் பல ஆண்டுகளாக சுமந்திருக்கிறீர்கள். இந்த கிரீடம் உங்களுக்கு மிகவும் சரியாக பொருந்துகிறது. அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமிருந்து ஒரு வலுவான கம்பேக்கை எதிர்பார்க்கிறேன்” என்று என பதிவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...