Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
விளையாட்டு

IPL 2025 Final: குறுக்கே வந்த மழை; ஐபிஎல் இறுதிப் போட்டியின் தலைவிதி என்ன?

T

The Leader Desk

ஜூன் 3, 2025 • 4:25 AM

IPL 2025 Final: குறுக்கே வந்த மழை; ஐபிஎல் இறுதிப் போட்டியின் தலைவிதி என்ன?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல்முறையாக கோப்பை வெல்லலாம் என கனவுடன் இருக்கும் நிலையில் அதற்கு குறுக்கே மழை வந்துள்ளது.
  • தற்போதைய நிலவரத்தின்படி, இன்றைய நாளில் அகமதாபாத் நகரத்தில் 62 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
  • அதே சமயம், போட்டி நேரத்தின்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
  • இந்த இறுதிப் போட்டி நாளில் 62% மழை பெய்யும் என்று கூறப்படும் நிலையில், போட்டி அதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
எழுத்து அளவு:

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல்முறையாக கோப்பை வெல்லலாம் என கனவுடன் இருக்கும் நிலையில் அதற்கு குறுக்கே மழை வந்துள்ளது.

இந்த இறுதிப் போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.

இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத நிலையில், எந்த அணி கோப்பை வென்று வரலாறு படைக்கப் போகிறது என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் மழை இந்த ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு குறுக்கே வந்து நின்று இருக்கிறது.

ஏற்கனவே இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றபோது மழையால் போட்டி நீண்ட நேரம் தாமதமாகவே தொடங்கியது. அதேபோலவே இறுதிப்போட்டியின் போதும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன.

 தற்போதைய நிலவரத்தின்படி, இன்றைய நாளில் அகமதாபாத் நகரத்தில் 62 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதே சமயம், போட்டி நேரத்தின்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியின் போதும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இரவு நேரத்தில் குறைவாக இருப்பதாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், போட்டியில் டாஸ் போடப்பட்டதற்குப் பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் மழை பெய்தது. எனவே, வானிலை அறிக்கையை அப்படியே நம்ப முடியாது. இந்த இறுதிப் போட்டி நாளில் 62% மழை பெய்யும் என்று கூறப்படும் நிலையில், போட்டி அதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

எனினும், முழுமையாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். IPL 2025: ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த கேப்டனும் செய்யாத ஐபிஎல் பைனல் சாதனையை செய்த ஸ்ரேயாஸ் ஐயர் மேலும், போட்டி நேரத்திற்கு முன்பு மாலை 5 மணி முதல் 7 மணி வரை அதிகப்படியான மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பு செய்யும் இணையதளங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே, போட்டி தாமதமாக துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...