1200 x 80 DMirror

 
 

இலங்கையில் இருந்து மீண்டும் நாடு திரும்ப விரும்பும் தங்களது நாட்டு பிரஜைகளை உடனடியாக அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

2012ஆம் ஆண்டு அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சதொச ஊழியர்களை அரசியல் விடயங்களுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சசி வீரவன்சவை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை நாளைய தினத்திற்கு (31) கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பண்டாரகம-அட்டுலுகமவில் சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது.

 ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கலீலுர் ரஹ்மான் விலகியுள்ளார்.

சுமார் 90 நாட்களுக்கு பின்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

” என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நுகர்வோருக்கு அனுமதியை வழங்குவதற்கும் அவசியமான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு வீட்டினதும் தொழிற்சாலைகளினதும் கூரைகள் மீது இலகுவாக பொறுத்தக் கூடிய சூரிய சக்தி தகடுகள் உள்ளன.

இதனூடாக பகல் வேளையில் மின்சாரத்தை பெறமுடியுமாயின் தற்போது மின்னுற்பத்திகாக பயன்படுத்தப்படும் நீர் மற்றும் எரிபொருளை பயன்படுத்தி இரவு வேளையில் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும்.

இதற்கமைய 24 மணிநேரமும் துண்டிப்பின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி